வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: வியாழன், 5 டிசம்பர் 2019 (11:43 IST)

கவுரவம் முக்கியம்... திமுகவில் இணைந்தார் பி.டி.அரசகுமார்!

ஸ்டாலின் தலைமையில் திமுகவில் இணைந்தார் பாஜக மாநில துணை தலைவர் அரசகுமார்.
 
புதுக்கோட்டையில் நடைபெற்ற திமுக பிரமுகர் ஒருவர் வீட்டு திருமண விழாவில் கலந்து கொண்ட பாஜக மாநில துணை தலைவர் பி.டி.அரசக்குமார் எம்.ஜி.ஆருக்கு பிறகு நான் ரசிக்கும் தலைவர் மு.க.ஸ்டாலின். அவர் நினைத்திருந்தால் கூவத்தூர் சம்பவத்தின்போதே முதல்வராகி இருக்க முடியும். காலம் வரும்போது கட்டாயமாக ஸ்டாலின் முதல்வராவார் என பேசியிருந்தார். 
 
அதிமுகவுடன் கூட்டணியில் இருந்து கொண்டு எதிர்கட்சி தலைவரை அரசக்குமார் பாராட்டி பேசியது பாஜகவினரிடம் அதிருப்தியை ஏற்படுத்தியது. இதனைத்தொடர்ந்து அரசக்குமார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாஜகவினர் மத்திய தலைமைக்கு புகார் அளித்துள்ளனர். 
 
இந்நிலையில் அரசகுமார் திமுகவில் இணைந்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, தமிழக பாஜகவில் ஒரு சிலரை தவிர மற்றவர்களை வளரவிட மாட்டார்கள். திமுகவில் இணைந்ததில் மகிழ்ச்சி. திருமண நிகழ்வில் உண்மையை எதார்த்தமாக பேசினேன். சுயமரியாதை இழக்க தயாராக இல்லை, ஆனால் அது பாஜகவில் எனக்கு ஏற்பட்டது. மு.க.ஸ்டாலினை புகழ்ந்து பேசியபின் கேட்க முடியாத பல வார்த்தைகளை கேட்டேன் எனவே தற்போது திமுகவில் இணைந்துள்ளேன் என குறிப்பிட்டுள்ளார்.