1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: சனி, 29 மே 2021 (09:42 IST)

ஜூன் மாதம் ரேஷனில் கிடைக்கப்போவது என்ன??

ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஜூன் மாதம் முதல் 13 வகையான இலவச மளிகைப் பொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்கப்படும் என அறிவிப்பு. 

 
தமிழகத்தில் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு ஜூன் 7 ஆம் தேதி காலை 6 மணி வரை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதில் நடமாடும் காய்கறி, பழங்கள் விற்பனை தொடர்புடைய துறைகள் மூலம் தொடர்ந்து இயங்கும் என தமிழக அரசு கூறியுள்ளது.
 
மேலும், ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஜூன் மாதம் முதல் 13 வகையான இலவச மளிகைப் பொருட்கள் அடங்கிய தொகுப்பு வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். அதோடு கொரோனா நிவாரண நிதி பாக்கியான ரூ.2,000 ஜூன் 3 ஆம் தேதி முதல் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
ஆம், கொரோனா நிவாரண நிதியாக ரூ.4,000 கொடுக்கப்படும் என முதல்வர் முக ஸ்டாலின் அறிவித்த நிலையில் கடந்த மாதம் முதல் தவணையாக ரூ.2,000 கொடுக்கப்பட்டது. தற்போது ஜூன் 3 ஆம் தேதி முதல் மீத பணம் கொடுக்கப்படும். இம்முறையும் பணம் வழங்க டோக்கன் முறையே பயன்படுத்தப்படும் என தெரிகிறது.