செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: செவ்வாய், 5 நவம்பர் 2019 (12:52 IST)

பணிவாரா விஜய் சேதுபதி? சென்னை அலுவலகம் முற்றுகை!!

நடிகர் விஜய் சேதுபதியின் சென்னை ஆழ்வார் திருநகர் அலுவலகத்தை  வணிகர் சங்க பேரமைப்பினர் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர். 
 
கோலிவுட் முன்னணி நடிகர் விஜய் சேதுபதி ஆலைன் வர்த்தகம் தொடர்பான மண்டி என்ற செயலியின் விளம்பரத்தில் நடித்துள்ளார். இந்த விளம்பரம் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகி சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது. ஆம், விஜய் சேதுபதி இந்த விளம்பரத்தில் நடித்துள்ளதற்கு சில்லறை வணிகர்கள் சங்கம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. 
 
அதோடு, சிறு குறு வியாபாடிகளை பாதிக்கும் ஆன்லைன் வர்த்தகத்திற்கு பணம் வாங்கிக்கொண்டு துணை போகும் நடிகர் விஜய் சேதுபதியின் அலௌவல்கத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவோம் என தெரிவித்திருந்தனர். 
 
சொன்னதை போல இன்று சென்னை ஆழ்வார் திருநகரில் நடிகர் விஜய்சேதுபதி அலுவலகத்தை வணிகர் சங்க பேரமைப்பினர் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வ்ரௌகின்றனர். ஆன்லைன் வர்த்தக செயலி விளம்பரத்தின் ஒப்பந்தத்தை விஜய் சேதுபதி ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி இந்த போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.