Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

ரஜினிகாந்த் உருவபொம்மை எரிப்பு: திராவிடர் கழகத்தின் போராட்டம் ஏன்?

rajinikanth politics" width="600" />
sivalingam| Last Modified சனி, 20 மே 2017 (06:37 IST)
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நேற்று தனது ரசிகர்களிடையே பேசியபோது, 'தன்னை பற்றி ஒருசிலர் சமூக வலைத்தளங்களில் மோசமான வார்த்தைகளை கொண்டு விமர்சனம் செய்து வருவதாகவும், இவ்வளவு கீழ்த்தரமாக அவர்கள் நடந்து கொள்வது தன்னை வருத்தப்பட வைத்ததாகவும் கூறினார்.


 


ரஜினியின் இந்த பேச்சுக்கு கண்டனம் தெரிவித்துள்ள திராவிடர் கழகத்தினர் தமிழர்களை கீழ்த்தரமானவர்கள் என்று கூறிய ரஜினிகாந்த் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் போராட்டம் நடத்தி வருகின்றனர். நேற்று தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பில் சென்னை அம்பத்தூரில் நடந்த போராட்டத்தின் போது ரஜினியின் உருவ பொம்மை எரிக்கப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

உடனடியாக போலீசார் தலையிட்டு உருவபொம்மையில் எரிந்த தீயை அணைத்தனர். இந்நிலையில் ரஜினிகாந்த் உடனடியாக தமிழ் மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் வேண்டும் இல்லாவிட்டால் ரஜினி வீடு முற்றுகையிடப்படும் என்றும் அவர்கள் கோஷமிட்டனர்.


இதில் மேலும் படிக்கவும் :