1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 5 மார்ச் 2024 (14:20 IST)

எம்.ஜி.ஆர்.- ஜெயலலிதா படத்தை வைத்து பிரசாரம்: பாஜகவினர் 3 பேர் சஸ்பெண்ட்

எம்.ஜி.ஆர்-ஜெயலலிதா படத்தை வைத்து , தேர்தல் பரப்புரை    மற்றும் அமைச்சர் நமச்சிவாயத்தை எம்.ஜி.ஆர் போல சித்தரித்து சமூக வலைதளங்களில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட பாஜக பிரமுகர்கள் 3 பேரை சஸ்பெண்ட் செய்து   பாஜகவின் பொதுச்செயலாளர் மோகன் குமார் உத்தரவிட்டுள்ளார்.
 
விரைவில் நாடாளுமன்ற தேர்தல் வரவுள்ள நிலையில், பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட  தேசிய கட்சிகளும், திமுக, திரிணாமுல், ஆம் ஆத்மி, சமாஜ்வாடி உள்ளிட்ட  மாநில கட்சிகளும் கூட்டணி பற்றியும் தொகுதி பங்கீடு பற்றி பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
 
சமீபத்தில் பாஜக கூட்டணியில் இருந்து எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக விலகி, இனி எப்போதும்  பாஜகவுடன் கூட்டணி கிடையாது என்று தெரிவித்தது.
 
இது பாஜகவினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்திய போதிலும் சமீபத்தில் பல்லடம் அருகேயுள்ள மாதப்பூரில் நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி  பங்கேற்று ஆளும் திமுக அரசை குற்றம்சாட்டினார். அதேசமயம், முன்னாள் முதல்வர்களும், அதிமுக தலைவர்களுமான எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதாவின் ஆட்சியைப் புகழ்ந்து பேசினார்.
 
இதனால் மீண்டும் இரு கட்சிகளிடையே கூட்டணி வருமா? என்று கேள்வி எழுப்பப்பட்டது.
இந்த   நிலையில்,  அதிமுகவினரின் செயல்பாடுகளும், பாஜக அரசை விமர்சிப்பதாக உள்ளது.
 
இந்த நிலையில், புதுச்சேரியில் அதிமுக தலைவர்காள் எம்.ஜி.ஆர்-ஜெயலலிதா படத்தை வைத்து , தேர்தல் பரப்புரை    மற்றும் அமைச்சர் நமச்சிவாயத்தை எம்.ஜி.ஆர் போல சித்தரித்து சமூக வலைதளங்களில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட பாஜக பிரமுகர்கள் 3 பேரை சஸ்பெண்ட் செய்து   பாஜகவின் பொதுச்செயலாளர் மோகன் குமார் உத்தரவிட்டுள்ளார்.
 
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  

பாரதிய ஜனதா கட்சி புதுச்சேரி மாநில தலைமையின் வழிகாட்டுதலை பின்பற்றாமல் கட்சியின் கட்டுப்பாட்டை மீறி, தலைமையின் அனுமதியின்றி செயல்பட்ட திரு.K.விஜயபூபதி திரு.J.ராக் பெட்ரிக், திரு.K.பாபு இவர்கள் மூவரும் கட்சியின் அடிப்படை உறுப்பினர்களில் இருந்து தற்காலிகமாக நீக்கப்படுகிறார்கள். மேலும் கட்சி நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் இவர்களுடன் எந்தவித கட்சித் தொடர்பும் வைத்துக் கொள்ள கூடாது என்று அறிவுறுத்தப்படுகிறார்கள். என்று தெரிவித்துள்ளார்.