எதற்காக அண்டை மாநிலங்களில் நீர்ப்பிச்சை எடுக்க வேண்டும்? சுரேஷ் காமாட்சி ஆவேசம்..!
தமிழகத்தின் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்யாமல் எதற்காக அண்டை மாநிலங்களில் நீர்ப்பிச்சை எடுக்க வேண்டும்? என பிரபல தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி ஆவேசமாக கூறியுள்ளார். அவர் இதுகுறித்து தனது சமூக வலைத்தளத்தில் கூறியிருப்பதாவது:
நீரை சேகரிக்க இனியாவது நாம் பழக வேண்டும். நீர்ப் பிச்சை எடுக்கிறோமா? இல்லை, அரசியல் பிச்சைக்காகப் பயனாகிறதா காவிரி எனத் தெரியவில்லை.
காவிரிப் படுகை விவசாயிகளின் தேவைக்கு நீரை சேகரிக்கும் நடவடிக்கைகளில் இத்தனை ஆண்டு காலம் எந்த அரசும் நடவடிக்கை எடுக்கவே இல்லை. மாற்றுத் திட்டம் வேண்டாமா நமக்கு?
மானத் தமிழன் வீரத் தமிழன் என்பது வெறும் பேச்சில் தானா?? தண்ணீர் தருகிறேன் எனச் சொன்னாலும்... வேணாம். தேவையில்லை. எங்கள் தேவையை நாங்களே பார்த்துக் கொள்கிறோம் எனும் நிலையை எப்போது உருவாக்கப் போகிறோம்??
நேற்று நடந்த சித்தா பட விழாவில் கன்னடத்தில் பேச முயற்சித்தும் சித்தார்தால் பத்திரிகையாளர்கள் சந்திப்பை தொடர இயலவில்லை. அவ்வளவு தெளிவாக அரசியல் நடத்தும் வித்தை அண்டை மாநிலத்தவருக்குத் தெரிந்திருக்கிறது.
நமக்கு ஏன் தெரியவில்லை? காலங்காலமாக கடந்து வரும் கேள்விக்கு பதில் தேட வேண்டிய நேரம் இது.
Edited by Siva