1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 31 மார்ச் 2024 (11:54 IST)

தமிழகம் வரும் ராகுல் காந்தி, பிரதமர் மோடி..! ரோடு ஷோ நடத்த போட்டி போடும் கட்சிகள்!

மக்களவை தேர்தல் தமிழ்நாட்டில் நடைபெற உள்ள நிலையில் பிரதமர் மோடி, காங்கிரஸ் எம்.பி பிரியங்கா காந்தி வருகை என தமிழ்நாடு அரசியல் களம் பரபரப்பாக உள்ளது.



மக்களவை தேர்தலில் முதற்கட்டமாக தமிழ்நாட்டின் 39 தொகுதிகளிலும் தேர்தல் நடைபெற உள்ளது. இதில் தேசிய கட்சியான காங்கிரஸின் இந்தியா கூட்டணியில் ஆளும் திமுக மற்றும் தோழமை கட்சிகள் உள்ளன. பாஜக கூட்டணியில் பல்வேறு மாநில கட்சிகள் இணைந்துள்ளன.

இந்நிலையில் முதற்கட்டமே தேர்தல் தமிழ்நாட்டில் நடைபெறுவதால் காங்கிரஸ், பாஜக தேசிய தலைவர்கள் பலர் அடுத்தடுத்து தேர்தல் பிரச்சாரத்திற்காக தமிழ்நாட்டின் பல முக்கிய தொகுதிகளுக்கு வர உள்ளனர். ஏற்கனவே தேர்தலுக்கு முன்பிருந்தே தொடர்ந்து தமிழகம் வந்து செல்லும் பிரதமர் மோடி 6வது முறையாக மீண்டும் தமிழகம் வருகிறார்.

இந்த முறை வரும் ஏப்ரல் 9ம் தேதி தமிழகம் வரும் பிரதமர் மோடி சென்னை, வேலூர், பெரம்பலூர் உள்ளிட்ட பகுதிகளில் பாஜக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்கிறார்.


சென்னையில் பிரதமர் மோடிக்கு கோவையில் நடத்தியது போல ரோடு ஷோ நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளதாம்.

அதுபோல காங்கிரஸ் கூட்டணி கட்சிகளுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய ராகுல்காந்தி ஏப்ரல் 11ல் இருந்து 13ம் தேதிக்குள் ஒருநாள் தமிழ்நாடு வர சம்மதம் தெரிவித்துள்ளார். அவர் எங்கெங்கு பிரச்சாரம் மேற்கொள்ள வேண்டும் என திட்டம் தயாராகி வருகிறதாம். தென் மாவட்டங்களை மையப்படுத்திய வகையில் அவரது பயண திட்டம் அமையும் என கூறப்படுகிறது.

அதை தொடர்ந்து பிரியங்கா காந்தியும் தமிழகத்தில் பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். கர்நாடகாவில் பிரச்சாரம் முடித்து ஓசூர் வரும் அவருக்கு அங்கு ரோடு ஷோ நடத்தவும் காங்கிரஸார் திட்டமிட்டு வருகிறார்களாம்.

Edit by Prasanth.K