வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Modified: ஞாயிறு, 28 மே 2017 (11:07 IST)

வாட்டர் கேன் உற்பத்தியாளர்கள் வேலை நிறுத்தம் - பொதுமக்கள் பாதிக்கப்படும் அபாயம்

தனியார் வாட்டன் கேன் உற்பத்தியாளர்கள் இன்று மாலை முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதால் பொதுமக்கள் பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.


 

 
தற்போது பெரும்பாலான வீடு மற்றும் அலுவலகங்களில் தனியார் தண்ணீர் கேன்கள்தான் அதிகம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், சமீபத்தில் விதிக்கப்பட்ட 18 சதவீத ஜிஎஸ்டி வரி விதிப்பை கண்டித்து தண்ணீர் கேன் உற்பத்தியாளர்கள் இன்று மாலை முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளனர்.
 
இதில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட தனியார் கேன் குடிநீர் உற்பத்தியாளர்கள் பங்கேற்கவுள்ளதால் இந்த மாவட்டங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உருவாகியுள்ளதால், இந்த விவகாரம் பொதுமக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.