பள்ளிவேன் கவிழ்ந்து 18 பேர் படுகாயம்
பள்ளிவேன் கவிழ்ந்து 18 பேர் படுகாயம்
வேகமாக சென்ற தனியார் பள்ளி வேன் கவிழ்ந்து 18 பேர் படுகாயமடைந்தனர்.
சேலம் மாவட்டம், கெங்கவல்லி மிக அருகில் நடுவலூர் உள்ளது. இங்கு ஜிஇடி எக்ஸ்லண்ட் என்ற மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது.
இந்த நிலையில், இந்தப் பள்ளிக்கு சொந்தமான, வேன் மூலம் ஹாஸ்டலுக்க தேவையான காய்கறிகளை கொண்டு சென்றனர்.
வேன், ஆத்தூர் - பெரம்பலூர் சாலையில், வால்கரடு பஸ் நிலையம் அருகே சென்றபோது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையின் நடுவே தலைகீழாக கவிழ்ந்தது.
இதில் வேனில் பயணம் செய்த 15 ஆசிரியைகள், 3 டிரைவர்கள் உள்ளிட்ட 18 பேரும் படுகாயமடைந்தனர். அருகில் இருந்தவர்கள் அவர்களை மீட்டு, ஆத்தூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த விபத்து காரணமாக, ஆத்தூர் - பெரம்பலூர் சாலையில், சில மணி நேரம் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.