செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : திங்கள், 1 ஏப்ரல் 2024 (13:54 IST)

கலர் கலராக பொய் சொல்கிறார் பிரதமர் மோடி..! ஆர்.எஸ். பாரதி கடும் விமர்சனம்..!!

RS Bharathi
தேர்தல் தோல்வி பயம் காரணமாக கலர் கலராக பொய் சொல்கிறார் பிரதமர் மோடி என்று திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ் பாரதி விமர்சித்துள்ளார்.
 
கச்சத்தீவு விவகாரத்தில் திமுகவின் இரட்டை வேடம் அம்பலமாகிவிட்டது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். மோடியின் விமர்சனத்திற்கு பதில் அளித்துள்ள திமுக அமைப்பு செயலாளர் ஆர் எஸ் பாரதி, கேட்கும் நிதியை கொடுக்காத பிரதமர் மோடி, கச்சத்தீவு விவகாரத்தில் மக்களை திசை திருப்புகிறார் என்று குற்றம் சாட்டி உள்ளார்.
 
கச்சத்தீவை கொடுக்க கூடாது என்று கருணாநிதி சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றியதாகவும், கச்சத்தீவுக்கு எதிராக தமிழகம் முழுவதும், திமுக கூட்டம் நடத்தியது, நானும் அப்போது பங்கேற்றேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
 
தமிழினத்தை அழித்த இலங்கை திவாலான போது ரூ.34,000 கோடி கொடுத்தவர் பிரதமர் மோடி என குறிப்பிட்ட ஆர் எஸ் பாரதி, இலங்கை திவாலான போது, கச்சத்தீவை பிரதமர் மோடி மீட்டிருக்கலாமே? என்று கேள்வி எழுப்பி உள்ளார்.

 
இலங்கை மின் பணிகளை அதானிக்கு வாங்கி கொடுத்ததற்கு பதிலாக, கச்சத்தீவை மீட்டிருக்கலாமே? என்றும் அவர் தெரிவித்துள்ளார். அத்வானிக்கு பாரத ரத்னா விருது கொடுத்த போது, குடியரசு தலைவரை அவமதித்துள்ளனர் என்று திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி விமர்சித்துள்ளார்.