திங்கள், 7 ஏப்ரல் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 4 ஏப்ரல் 2025 (13:10 IST)

ராமேஸ்வரம் வரும் பிரதமர் மோடி.. ஈபிஎஸ், ஓபிஎஸ் தனித்தனியாக சந்திக்க திட்டம்..!

Modi & Edappadi
பிரதமர் நரேந்திர மோடி ராமேஸ்வரத்தில் பாம்பன் பாலத்தை திறந்து வைக்க இம்மாதம் ஆறாம் தேதி வரவிருக்கின்ற நிலையில், அவரை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் ஆகிய இருவரும் தனித்தனியாக சந்திக்க திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
 
மதுரை விமான நிலையத்தில் பிரதமர் மோடியை எடப்பாடி பழனிச்சாமி சந்திக்க உள்ளதாகவும், அதன் பிறகு ராமேஸ்வரத்தில் முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் சந்திக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. கடந்த வாரம் எடப்பாடி பழனிச்சாமி டெல்லி சென்று பிரதமரை சந்தித்த நிலையில், அதிமுக தலைவர்களில் சிலரும் டெல்லி சென்றனர்.
 
இந்த நிலையில், நாளை மறுநாள் பிரதமர் மோடியை எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ. பன்னீர்செல்வம் ஆகிய இருவரும் தனித்தனியே சந்திக்க இருப்பது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
இந்த சந்திப்பின்போது பாஜக - அதிமுக இடையிலான கூட்டணி உறுதி செய்யப்படும் என்றும், அதுமட்டுமின்றி அதிமுகவில் ஓ. பன்னீர்செல்வம் மீண்டும் இணைவது குறித்த தகவலும் வெளிவரலாம் என்றும் கூறப்படுகிறது.
 
Edited by Mahendran