செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : ஞாயிறு, 24 மே 2020 (19:35 IST)

இது ஒன்றை தவிர மற்றதெல்லாம் ஓகே: பிரேமலதா விஜயகாந்த்

அதிமுகவின் கூட்டணி கட்சியாக இருந்தாலும் தேமுதிக அவ்வப்போது அதிமுக அரசின் செய்யும் தவறுகளை சுட்டிக் காட்டி வருகிறது என்பது தெரிந்ததே. குறிப்பாக தமிழக அரசு டாஸ்மாக் கடைகளை திறக்க முடிவு செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்த கட்சிகளில் ஒன்று தேமுதிக என்பது குறிப்பிடத்தக்கது,
 
இந்த நிலையில் சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் சற்று முன்னால் செய்தியாளர்களை சந்தித்தார். அவர் செய்தியாளர்களிடம் பேசியபோது, ‘ஊரடங்கு முடியும் வரை டாஸ்மாக் கடைகளைத் திறக்காமல் இருந்திருக்கலாம் என்றும் மதுக்கடை திறப்பு தவிர தமிழக அரசு மற்ற அனைத்து பணிகளையும் சிறப்பாக செய்து வருவதாகவும் அவர் தெரிவித்தார் 
 
மேலும் திமுக ஆட்சியில் இருந்தால் இதை விட சிறப்பாக என்ன செய்துவிடப் போகிறார்கள்? என்று கேள்வி எழுப்பி அவர், அனைத்து மாவட்டங்களிலும் மக்களுக்கு தேவையான உதவிகளை தேமுதிக செய்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்