சசிகலாவுடன் கூட்டணியா? பிரேமலதா விளக்கம்!
பிரேமலதா, சசிகலாவுக்கு ஆதரவாக பேசியதை விவாதத்திற்கு உட்படுத்த வேண்டாம் என கோரியுள்ளார்.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா கடந்த 27ஆம் தேதி சிறையிலிருந்து விடுதலை ஆனாலும் அதன் பின்னர் அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று அவர் மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.
அதிமுக கூட்டணியில் இன்னும் தேமுதிக உறுதி செய்யப்படாத நிலையில் சசிகலாவின் வருகை அதிமுகவில் எந்த வித தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம் என்று அக்கட்சியின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கூறினார்.
இதற்கு சில விமர்சனங்கள் எழுந்ததால் பிரேமலதா, சசிகலாவுக்கு ஆதரவாக பேசியதை விவாதத்திற்கு உட்படுத்த வேண்டாம் என கோரியுள்ளார். மேலும், அதிமுக கூட்டணியில்தான் இந்த நிமிடம் வரை தேமுதிக இருப்பதாகவும் ஒரு பெண்ணாக சசிகலாவுக்கு ஆதரவு தெரிவித்ததாகவும் விளக்கமளித்துள்ளார்.
அதோடு, தேர்தலுக்கு குறுகிய காலமே இருப்பதால், கூட்டணி, தொகுதி பங்கீடு குறித்து அதிமுக தலைமை பேச்சுவார்த்தையை துவங்க வேண்டும் என பிரேமலதா வலியுறுத்தினார்.