கர்ப்பிணி பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த போலீஸ் கைது

Last Modified வெள்ளி, 2 பிப்ரவரி 2018 (17:31 IST)
பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்தது தொடர்பாக ஈரோடு ரயில்வே காவல் துரையினர் உதகையை சேர்ந்த சிபிசிஐடி உதவி ஆய்வாளரை கைது செய்தனர்.
நேற்றிரவு சென்னை எழும்புர் ரயில் நிலையித்திலிருந்து இருந்து கோவை நீலகிரிக்கு ரயிலில் பயணம் செய்து கொண்டிருந்த கர்ப்பிணி பெண் ஒருவரிடம், அதே ரயலில் பயணித்த
சந்திரசேகர் என்ற சிபிசிஜடி உதவி ஆய்வாளர் பாலியல் வன்முறையில் ஈடுப்பட்டதாக கூறப்படுகிறது.

இதனையறிந்த அந்த பெண்ணின் கணவர் மது போதையில் இருந்த சந்திரசேகரனை பிடித்து ஈரோடு ரயில்வே காவல் துரையினரிடம் ஒப்படைத்தார். இதனையடுத்து ரயில்வே காவல்
துரையினர் சந்திரசேகரைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

webdunia

இதில் மேலும் படிக்கவும் :