ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 10 மார்ச் 2023 (14:59 IST)

சீமான் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை: தமிழக அரசுக்கு பிரஷாந்த் கிஷோர் கேள்வி

ஹிந்தி பேசும் மக்கள் மீது வெறுப்புணர்வை தூண்டும் வகையில் பேசும் சீமான் மீது ஏன் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என பிரசாந்த் கிஷோர் தமிழக அரசுக்கு கேள்வி எழுப்பி உள்ளார். 
 
தமிழ்நாட்டில் இந்தி பேசும் மக்கள் மீது வெறுப்புணர்வையும் வன்முறையையும் தூண்டும் வகையில் பேசும் சீமான் மீது தமிழக அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என பீகார் மாநில அரசியல்வாதியும் தேர்தல் ஆலோசகரமான பிரசாந்த் கிஷோர் கேள்வி  எழுப்பி உள்ளார். 
 
கடந்த 2021 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றி பெற அவர் வேலை செய்தார் என்பதும் தற்போது திமுகவுக்கு எதிராகவே அவர் கேள்வி எழுப்பி உள்ளார் என்றும் குறிப்பிடத்தக்கது. 
 
பொதுக்கூட்டம் ஒன்றில் நாம் தமிழர் கட்சியை சேர்ந்த தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசிய வீடியோவையும் அவர் பதிவு செய்து தமிழக அரசுக்கு இந்த கேள்வியை எழுப்பி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Mahendran