விஜய்க்கு எதிராக களமிறக்கப்படுகிறாரா பிரகாஷ்ராஜ்? திமுகவின் திட்டம் என்ன?
தளபதி விஜய், தமிழக வெற்றி கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கியுள்ள நிலையில், இந்த கட்சியின் முதல் மாநாடு அக்டோபர் 27 ஆம் தேதி நடைபெற இருக்கின்றது. இந்த மாநாட்டிற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த மாநாட்டிற்கு பிறகு விஜய் தீவிரமாக அரசியல் களத்தில் இறங்குவார் என்று கூறப்படுகிறது. அவரது வளர்ச்சி திமுகவின் வாக்குகளை பாதிக்கும் என்று சிலர் கருதுகின்றனர்.
இந்நிலையில், விஜய்க்கு எதிராக சில சினிமா நட்சத்திரங்களை களமிறக்க திமுக திட்டமிட்டுள்ளதாகவும், குறிப்பாக திமுகவின் ஆதரவாளராக இருக்கும் பிரகாஷ் ராஜ் தேர்தல் நேரத்தில் பிரச்சார பீரங்கியாக களமிறக்கப்படுவார் என்றும் திமுக வட்டாரங்கள் கூறுகின்றன.
ஏற்கனவே, "இருவர்" திரைப்படத்தில் கருணாநிதியின் கதாபாத்திரத்தில் பிரகாஷ் ராஜ் நடித்திருந்தார் என்பதும், சமீபத்தில் பல மேடைகளில் அவர் கருணாநிதியின் புகழை அவர் பேசியுள்ளதால் விஜய்க்கு எதிராக களமிறக்கும் வாய்ப்பை அதிகரிக்கின்றது என கூறப்படுகிறது.
ஆனால் விஜய்க்கு உள்ள ரசிகர் ஆதரவு மற்றும் பிரகாஷ் ராஜின் ரசிகர்களின் எண்ணிக்கைக்கும் உள்ள வித்தியாசம் மிகப்பெரியது என்றும், பிரகாஷ் ராஜின் பிரச்சாரம் விஜய்யை எதுவும் செய்ய முடியாது என்றும் விஜய் ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.
Edited by Mahendran