செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: திங்கள், 9 ஜனவரி 2023 (18:16 IST)

11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு செய்முறை தேர்வு தேதி அறிவிப்பு

exam
பொதுத்தேர்வு எழுதும் பதிவு 11ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறை தேர்வு தேதிகள் அறிவிக்கப்பட்டு உள்ளது.
 
 பிளஸ் டூ பொதுத் தேர்வு மார்ச் 13-ஆம் தேதி முதல் தொடங்க இருக்கும் நிலையில் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு 14ம் தேதி தொடங்க உள்ளன. இந்த நிலையில் 11ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு செய்முறை தேர்வுகள் மார்ச் 7ஆம் தேதி முதல் 10-ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது
 
இதுகுறித்த அறிவிப்பை தேர்வுத்துறை சற்றுமுன் வெளியிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஆண்டு 11 மற்றும் 12ஆம் வகுப்பு தேர்வுகளை சுமார் 8 லட்சம் மாணவர்கள்  எழுதுகிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது
 
Edited by Mahendran