திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By J.Durai
Last Modified: கோயம்புத்தூர் , திங்கள், 22 ஏப்ரல் 2024 (15:04 IST)

பிபிஜி தொழில்நுட்பக் கல்லூரி 16வது ஆண்டு விழா

கோவை பிபிஜி தொழில்நுட்பக் கல்லூரியின் 16வது ஆண்டு பிபிஜி தொழிட்நுட்பக் கல்லூரி அரங்கத்தில் இனிதே நடைபெற்றது. 
 
பி பி ஜி கல்வி குழுமத்தின் தலைவர்  மருத்துவர் L.P. தங்கவேலு,பி பி ஜி கல்வி குழுமத்தின் தாளாளர் திருமதி சாந்தி தங்கவேலு  அவர்கள் மற்றும் பி பி ஜி கல்வி குழுமத்தின் துணை தலைவர்  அக்ஷய் தங்கவேல்  ஆகியோர்  முன்னிலை வகித்தனர்.
 
காலை 10 மணியளவில் தமிழ் தாய் வாழ்த்து பாடி இனிதே விழா துவங்கியது .
கல்லூரி முதல்வர் முனைவர் நந்தகுமார் அவர்கள் வரவேற்புரை ஆற்றினார் பின்பு ஆண்டு அறிக்கை வாசித்தார்.
 
சிறப்பு விருந்தினர் பி பி ஜி கல்வி குழுமத்தின் தலைவர் மருத்துவர் L.P. தங்கவேலு அவர்கள் சிறப்புரை ஆற்றினார்.
 
பி பி ஜி கல்வி குழுமத்தின் துணை  திரு அக்ஷய் தங்கவேல் அவர்கள் வாழ்த்துரை வழங்கினார்.
 
பல்வேறு போட்டியில் வெற்றி அடைந்த மாணவ மாணவியர்களுக்கு பரிசுகள் வழங்கப்பெற்றன.
மாணவ மாணவியரின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
 
விழா ஒருங்கிணைப்பாளர் முனைவர்  சுந்தர் ராஜ் அவர்கள் நன்றியுரை வழங்கினார்.
இறுதியில் நாட்டு பண் இசைக்கபெற்று, விழா வெற்றிகரமாக நிறைவடைந்தது.