Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

சசிகலா முதல்வராக பதவியேற்கும் போஸ்டர்கள் - களைகட்டும் மதுரை


லெனின் அகத்தியநாடன்| Last Updated: வியாழன், 22 டிசம்பர் 2016 (16:29 IST)
சசிகலா முதலமைச்சராக பதவியேற்பது போன்ற போஸ்டர்கள் மதுரை முழுவதும் ஒட்டப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

 

தமிழக முன்னாள் முதலமைச்சரும், அஇஅதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதா கடந்த டிசம்பர் 6ஆம் தேதி திங்கட்கிழமை மாரடைப்பு காரணமாக மரணமடைந்தார்.

இதனால் கட்சியின் பொதுச்செயலாளர் யார் என்று அதிமுக வட்டாரத்தில் பரபரப்பு விவாதங்கள் ஏற்பட்டு வருகிறது. இதற்கிடையில், முதலமைச்சர் பதவியை ஓ.பன்னீர்செல்வமும், மற்ற அமைச்சர்களும் நள்ளிரவில் பதவியேற்றுக் கொண்டனர்.

ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியும், 25 ஆண்டு காலமாக அரசியல் ஆலோசகருமாக இருந்துவந்த சசிகலாதான் பதவியேற்க வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது. இந்நிலையில், சசிகலா எனும் நான் என்கின்ற பெயரில் மதுரை முழுவதும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது.

அஇஅதிமுக பொதுச்செயலாளாராகவும், தமிழக முதலமைச்சராகவும் பொருப்புகளை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று அதிமுக நிர்வாகிகள் கூறிவந்த நிலையில் இந்த போஸ்டர்கள் மேலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 


இதில் மேலும் படிக்கவும் :