1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Updated : திங்கள், 20 நவம்பர் 2017 (21:12 IST)

போட்டுக்கொடுத்த பூங்குன்றன் - சசிகலா குடும்பத்தினர் அதிர்ச்சி

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உதவியாளராக இருந்த பூங்குன்றன் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையிலேயே போயஸ் கார்டன் இல்லத்தில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியுள்ளனர் என்ற செய்தி வெளியாகியுள்ளது.


 
சசிகலா குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் மட்டுமில்லாமல் ஜெ.வின் முன்னாள் உதவியாளர் பூங்குன்றன் வீட்டிலும் வருமான வரித்துறையினர் சமீபத்தில் சோதனை நடத்தினர்.  அப்போது, அவரிடமிருந்து பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்படுகிறது. அதன் பின், அவரை அலுவலகத்திற்கு வரவழைத்து அதிகார்கள் விசாரணை நடத்தினர்.
 
அப்போது அவர் அளித்த தகவலின் பேரிலேயே, ஜெ. வாழ்ந்து வந்த போய்ஸ்கார்டன் இல்லத்தில் அதிகாரிகள் சோதனை செய்ததாக கூறப்படுகிறது. எந்தெந்த ஆவணங்கள் எங்கெங்குள்ளன என்பது பூங்குன்றனுக்கு தெரியும் என்பதால், அவரை உடன் வைத்துக்கொண்டுதான் அதிகாரிகள் சோதனை நடத்தினர். 
 
அதுபோக, சசிகலா குடும்பத்தினர் குறித்த பல முக்கிய தகவல்களை பூங்குன்றனிடமிருந்து அதிகாரிகள் கறந்துள்ளனர். இந்த விவகாரம் சசிகலா குடும்பத்தினருக்கு கோபத்தை ஏற்படுத்தியிருப்பதாக கூறப்படுகிறது.