பத்திரிகையாளர்கள் முன் பொன்முடி-அன்பழகன் மோதல்: வேடிக்கை பார்த்த ஸ்டாலின்

Last Modified புதன், 10 ஜனவரி 2018 (02:11 IST)
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா குறித்து சட்டசபையில் எம்.எல்.ஏ அன்பழகன் கூறிய கருத்து சர்ச்சைக்குரியதாக கருதப்பட்டதால் அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்பட்டது. இதனால் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக எம்.எல்.ஏக்கள் வெளிநடப்பு செய்தனர்.

இந்த நிலையில் சட்டமன்ற வளாகத்தில் இதுகுறித்து விளக்க ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது ஸ்டாலினின் ஒருபக்கம் துரைமுருகன் நின்றிருந்தார். இன்னொரு பக்கம் அவர் பக்கத்தில் நிற்பது யார் என்பது குறித்து பொன்முடி மற்றும் அன்பழகன் ஆகியோர் இடையே மோதல் நடந்தது

இந்த மோதலை சமாதானப்படுத்தாமல் சிரித்தபடியே ஸ்டாலின் இருந்த வீடியோ ஒன்று சமூக இணையதளங்களில் வலம் வந்து கொண்டிருக்கின்றது இதுபோன்று பிரச்சனைகள் வரும்போது புத்திசாலித்தனமாக கலைஞர் கையாண்ட நிலையில் ஸ்டாலினுக்கு அந்த முதிர்ச்சி வரவில்லை என்று திமுக தொண்டர்கள் பதிவு செய்து வருகின்றனர்.

webdunia

இதில் மேலும் படிக்கவும் :