எடப்பாடியார் நாளை வரை முதலமைச்சர் பதவியில் இருப்பாரா?-பொன்.ராதாகிருஷ்ணன் கேள்வி


bala| Last Updated: வெள்ளி, 17 பிப்ரவரி 2017 (13:50 IST)
எடப்பாடி பழனிச்சாமி தமிழக முதல்வராக பதவியேற்ற பின்னரும் அதிமுகவில் நிலவி வரும் குழப்பம் சரியாகவில்லை. நாளை சட்டசபையில் பெரும்பான்மையை எடப்பாடி பழனிச்சாமி நிரூபிக்க வேண்டும். இதனால் தமிழக அரசியல் களம் பெரும் பரபரப்பில் உள்ளது.

 

இந்தநிலையில் சபாநாயகர் தனபாலை ஓபிஎஸ் அணியைச் சேர்ந்த பாண்டியராஜன், செம்மலை,பொன்னையன் ஆகியோர் இன்று சந்தித்தனர்.  நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு உள்ள நிலையில் இவர்களது சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. சந்திப்புக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய ஓபிஎஸ் தரப்பு, சட்டசபையில் ரகசிய வாக்கெடுப்பு நடத்த சபாநாயகரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது என்றனர்.

இந்த பரபரப்பான சூழ்நிலையில் கோவை வந்த மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியபோது,

தற்போதைய அரசியல் சூழலில்  ஆளுநர் வித்யாசாகர் ராவ் நன்றாக யோசித்தே இந்த முடிவை எடுத்துள்ளார். எடப்பாடி பழனிசாமி நாளை வரை முதலமைச்சர் பதவியில் இருப்பாரா என்பதே கேள்விக்குறிதான். அவருக்கு என்னுடைய வாழ்த்துக்கள். நாளை வரை அவர் பதவியில் தொடர இறைவன் தான் அருள் புரிய வேண்டும். எம்.ஜி.ஆர். ஆரம்பித்து, ஜெயலலிதா வளர்த்த அ.தி.மு.க. கட்சி இன்று முடிந்து விட்டது என்றார்.

webdunia

இதில் மேலும் படிக்கவும் :