1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: செவ்வாய், 10 ஏப்ரல் 2018 (10:09 IST)

காவிரி பிரச்சனை தீரும்வரை திரைப்படங்கள் வெளியிடாமல் இருக்க தயாரா? பொன்னார் கேள்வி

ஐபிஎல் போட்டியை நடத்த கூடாது என்று கூறும் திரையுலகினர் காவிரி பிரச்சனை தீரும் வரை திரைப்படங்களை வெளியிடாமல் இருக்க தயாரா? என்று மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கேள்வி எழுப்புயுள்ளார். 
 
சென்னையில் ஐபிஎல் போட்டியை நடத்த கூடாது என்று நேற்று பாரதிராஜா, ஆர்.கே.செல்வமணி, சத்யராஜ் உள்பட பல திரையுலக பிரபலங்கள் கோரிக்கை வைத்தனர். இன்னும் ஒருசிலர் ஐபிஎல் போட்டியை யாரும் பார்க்க செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தி வருகின்றனர்.
 
இந்த நிலையில் காவிரி போராட்டத்தை திசைதிருப்பும் ஐபிஎல் போட்டியை நடத்த வேண்டாம் என்று கூறும் திரையுலகினர் காவிரி பிரச்சனை முடியும் வரை திரைப்படங்கள் வெளியிடாமல் இருக்க தயாரா? என்று மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கேள்வி எழுப்பியுள்ளார். 
 
தயாரிப்பாளர்களின் கோரிக்கைகளுக்காக மாதக்கணக்கில் வேலைநிறுத்தம் செய்யும் திரையுலகினர், காவிரி பிரச்சனைக்காக அரைநாள் மட்டுமே அறப்போராட்டம் நடத்தியதாகவும், அதிலும் ஒற்றுமை இல்லாமல் பல முன்னணி நடிகர்கள் வரவில்லை என்றும் ஏற்கனவே நெட்டிசன்கள் குற்றஞ்சாட்டி வரும் நிலையில் மத்திய அமைச்சரின் இந்த கேள்வி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு திரையுலகினர் என்ன பதில் சொல்ல போகின்றனர் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.