1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 12 ஏப்ரல் 2022 (12:11 IST)

பாலிடெக்னிக் முடித்த மாணவர்கள் அண்ணா பல்கலையில் சேரலாம்: அமைச்சர் அறிவிப்பு!

Ponmudi
பாலிடெக்னிக் முடித்த மாணவர்கள் அண்ணா பல்கலைக் கழகம் அதன் பொறியியல் கல்லூரிகளில் நேரடியாக 2ம் ஆண்டில் வகுப்பில் சேரலாம் என உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார்
 
 பாலிடெக்னிக் படிப்பு முடித்த மாணவர்கள் நேரடியாக பொறியியல் பட்டப் படிப்பில் இரண்டாம் ஆண்டில் சேர்க்கப் படுகிறார்கள் என்றும் இந்த ஆண்டு முதல் அண்ணா பல்கலைக்கழக CEG, Guinty, MIT, Chrompet ம்ற்றும் ACTech Guindy ஆகிய பொறியியல் கல்லூரி நேரடியாக இரண்டாமாண்டு மாணவர் சேர்க்கை அறிமுகப்படுத்தப்படும் என்றும் அமைச்சர் பொன்முடி கூறியுள்ளார் 
 
உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடியின் இந்த அறிவிப்பு பாலிடெக்னிக் முடித்த மாணவர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.