ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வியாழன், 23 செப்டம்பர் 2021 (21:45 IST)

மாசு கட்டுப்பாடு வாரிய தலைவர் வெங்கடாசலம் வீட்டில் சோதனை ஏன்?

தமிழக மாசுக்கட்டுப்பாட்டு வாரிய தலைவர் வீட்டில் சோதனை ஏன் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது
 
அதிமுக ஆட்சியில் தொழில் நிறுவனங்களுக்கு அனுமதி வழங்க பெரும் தொகையை வெங்கடாசலம் லஞ்சமாக பெற்றதாக புகார். 
 
தேர்தல் முடிவுகள் வெளியாவதற்கு முன் அவசர அவசரமாக 52 நிறுவனங்களுக்கு ஒப்புதல் வழங்கியதாக குற்றச்சாட்டு. 
 
ஏப்ரல் மாதத்தில் அவசர சட்டம் நடப்பில் அவசர கூட்டம் நடத்தி வெங்கடாசலம் ஒப்புதல் வழங்கி அதன் பின்னணியில் பெரும் லஞ்சம் கை மாறியதாக புகார். 
 
லஞ்சப் பணத்தில் வருமானத்துக்கு அதிகமாக வெங்கடாசலம் சொத்து சேர்த்ததாக எழுந்த புகாரை அடுத்து லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை. 
 
மாசு கட்டுப்பாட்டு வாரிய தலைவர் வெங்கடாசலம் சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள அம்மாபாளையத்தை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது