செவ்வாய், 5 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : திங்கள், 19 ஆகஸ்ட் 2019 (17:53 IST)

”மத உணர்வை தூண்டுகிறாரா ஜீயர்?”.. முஸ்லீம் அமைப்பு புகார்

ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர், மத உணர்வை தூண்டுகிறார் என இந்திய தவ்ஹீத் ஜமாத் அமைப்பு புகார் அளித்துள்ளது.

ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் சடகோப ராமானுஜர், காஞ்சிபுரத்தில் அத்திவரதர் நிகழ்வு நடந்தபொழுது, முற்காலத்தில் இஸ்லாமியர்களுக்கு அஞ்சி அத்திவரதரை மறைத்து வைத்தார்கள், தற்போது அந்த அவசியம் இல்லை, ஆதலால் அத்திவரதரை மீண்டும் குளத்திற்குள் வைக்கக்கூடாது என கூறியிருந்தார். ஜீயரின் இந்த வேண்டுகோளால் பெரும் சர்ச்சை உண்டானது.

இந்நிலையில் ஸ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் மத உணர்வை தூண்டுவது போல பேசியதாக காஞ்சிபுரம் மாவட்டம், இந்திய தவ்ஹீத் ஜமாத் அமைப்பு புகார் அளித்துள்ளது. இப்புகாரின் அடிப்படையில் ஸ்ரீவில்லிப்புத்தூர் ஜீயருக்கு போலீஸார் சம்மன் அளித்துள்ளனர்.அதன் படி வரும் 22 ஆம் தேதிக்குள் ஸ்ரீவில்லிபுத்தூர் நகர காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகி விளக்கமளிக்கும்படி ஜீயருக்கு ஆணையிட்டுள்ளனர்.