ஞாயிறு, 24 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வியாழன், 1 பிப்ரவரி 2024 (16:57 IST)

தேர்தல் சீசன்.. அரசியல் கட்சி கொடிகள் தயாரிக்கும் பணி தீவிரம்..!

தேர்தல் சீசன் ஆரம்பம் ஆகிவிட்டதை அடுத்து அரசியல் கட்சிகளின் கொடிகளை தயாரிக்கும் பணி தீவிரமாக நடந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது 
 
மக்களவை தேர்தல் அறிவிப்பு இந்த மாதம் அல்லது அடுத்த மாதம் வெளியாகும் என்றும் ஏப்ரல் மாதம் தேர்தல் நடைபெறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில்  அரசியல் கட்சிகளின் கொடி, சின்னம் ஆகியவை தயாரிக்கும் பணிகள் தற்போது தொடங்கி விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. 
 
கோவையில் உள்ள சில பகுதிகளில் தான் அரசியல் கட்சிகளின் கொடிகள் தயாரிக்கும் பணியை வழக்கமாக நடந்து வரும். குறிப்பாக டவுன் ஹால், காந்திபுரம், பீளமேடு, சிங்காநல்லூர் ஆகிய பகுதிகளில் அரசியல் கட்சி கொடிகள் தயாரிக்கப்பட்டு வரும். 
 
காட்டன், மைக்ரோ, பாலிஸ்டர் துணிகளில்  பல அளவுகளில் கொடிகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் திமுக, அதிமுக, பாஜக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சியினர், தேமுதிக, அமமுக, பாமக, விசிக ஆகிய கட்சிகளின் கொடிகள் தயாரிக்கப்பட்டு வருவதாகவும் இந்த முறை புதிதாக கமல்ஹாசன் கட்சியின் கொடிகளும் தயாரிக்கப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.. 
 
தேர்தல் அறிவிப்புக்கு முன்பே தற்போது அரசியல் கட்சிகள் கொடிகள் தயாரிக்கும் ஆர்டரை வழங்கி விட்டதாகவும் எனவே கொடிகள் தயாரிப்பதில் நாங்கள் பிசியாக இருக்கிறோம் என்றும் கொடிகள் தயாரிக்கும் நிறுவனத்தினர்கள் தெரிவித்துள்ளனர்
 
Edited by Siva