ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: செவ்வாய், 28 ஆகஸ்ட் 2018 (22:23 IST)

அஞ்சலி மேடையா? ஜால்ரா மேடையா? கருணாநிதியை மறந்த தலைவர்கள்

திமுக தலைவர் கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்து வகையில் திமுக சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்து வரும் நிலையில் இன்று நெல்லையில் ‘அரசியல் ஆளுமை கலைஞர்' என்ற தலைப்பில் ஒரு நிகழ்ச்சி நடைபெற்றது.
 
இந்த நிகழ்ச்சியில் பேசிய பெரும்பாலான அரசியல் கட்சி தலைவர்கள் கருணாநிதியின் புகழ் குறித்து ஒருசில நிமிடங்கள் மட்டுமே பேசிவிட்டு ஸ்டாலினை புகழ்வதிலேயே குறிக்கோளாக இருந்தனர். எனவே இது என்ன கருணாநிதியின் அஞ்சலி மேடையா? அல்லது ஸ்டாலினுக்கு ஜால்ரா தட்டும் மேடையா? என்ற சந்தேகம் நிகழ்ச்சியை பார்ப்பவர்களுக்கு ஏற்பட்டது.
 
குறிப்பாக திருமாவளவன், கீ.வீரமணி, துரைமுருகன், திருநாவுக்கரசர் ஆகியோர் ஸ்டாலினை 'இளைஞர் கலைஞர்' என்பது உள்பட பலவாறு புகழ்ந்து தள்ளினர். மொத்தத்தில் இந்த மேடையை கருணாநிதியின் புகழை பேச பயன்படுத்துவதை விட ஸ்டாலினை புகழ் தலைவர்கள் பயன்படுத்தி கொண்டார்கள் என்பதே உண்மை.