1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Modified: புதன், 15 பிப்ரவரி 2017 (10:04 IST)

மின்சாரத்தை துண்டித்து, கோபத்தை தூண்டி சசிகலாவை வெளியேற்றிய போலிசார்!

மின்சாரத்தை துண்டித்து, கோபத்தை தூண்டி சசிகலாவை வெளியேற்றிய போலிசார்!

சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா உள்ளிட்ட 3 பேருக்கு தண்டனை விதிக்கப்பட்டதை அடுத்து சசிகலா தங்கியிருந்த கூவத்தூர் ரிசார்ட் மிகவும் பரபரப்புடன் காணப்பட்டது. இதனால் அசம்பாவிதங்களை தடுக்க கூவத்தூர் ரிசாட் பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.


 
 
144 தடையுத்தரவு இருப்பதால் கூவத்தூர் ரிசார்ட்டில் நுழைந்த போலீசார் அங்கிருந்த எம்எல்ஏக்கள் மற்றும் சசிகலாவை உடனடியாக வெளியேற வலியுறுத்தினார். ஆனால் வெளியேற மறுத்த சசிகலா என்னை அழைத்துச்செல்ல கர்நாடக போலீஸ் வரும்வரை நான் இந்த இடத்தைவிட்டு வரமாட்டேன்.
 
அவர்கள் வரும்வரை தன்னால் போயஸ்கார்டனுக்கு செல்ல முடியாது. இங்குதான் இருப்பேன் என்றும் கூறினார். பின்னர் ஐ.ஜி. செந்தாமரை கண்ணன் ரிசார்ட்டுக்குள் நுழைந்து 144 தடையுத்தரவு இருப்பதால் யாரும் இங்கு இருக்க கூடாது என்று அறிவுறுத்தினார்.
 
இதனால் கோபமடைந்த அதிமுக அமைச்சர்கள் சிலர் இங்கு எம்எல்ஏக்கள், அமைச்சர்கள் அதிமுக பொதுச்செயலாளர் தான் இருக்கிறோம். ரவுடிகள் யாரும் இல்லை. இது ஒன்றும் பொது இடமல்ல, தனியார் இடம். எனவே நீங்கள்தான் இங்கிருந்து வெளியேறவேண்டும் என்றனர்.
 
இதனால் சசிகலாவை விடுதியில் இருந்து வெளியேற்றி போயஸ் கார்டனுக்கு செல்ல வைக்க போலிசார் முதலில் அங்கு மின்சார இணைப்பை துண்டித்தனர். பின்னர் விடுதியில் இருக்கும் ஜெனரேட்டருக்கு தேவையான எரிபொருளை யாரும் கொண்டு சென்றுவிடாதபடி விடுதியைச் சுற்றி வளைத்தனர். இதனால் சசிகலா கடும் டென்ஷன் ஆனார் இரவு 9.3௦ மணி வரை இந்த நிலைதான் நீடித்தது. அதன் பின்னர் தான் சசிகலா போயஸ் கார்டன் புறப்பட்டு சென்றார்.