Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

திருமண விருந்தில் கரை புரண்ட ‘சரக்கு’ - நூற்றுக்கும் மேற்பட்டோர் கைது!


லெனின் அகத்தியநாடன்| Last Updated: சனி, 24 டிசம்பர் 2016 (12:51 IST)
பண்ணை வீடு ஒன்றில் திருமண விருந்தில், மது அருந்தி விட்டு ஆட்டம் போட்ட நூற்றுக்கும் மேற்பட்டோரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

 

குஜராத் மாநிலம், வதோதரா மாவட்டத்தில் இருப்பது சேவாகி பகுதியில் உள்ள, பண்ணை வீடு ஒன்றில் திருமண நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. இதனையொட்டி மதுபான விருந்து நடைபெற்றுள்ளது.

அப்போது விருந்தில் கலந்துகொண்ட பலரும் குடித்து விட்டு மது போதையில், கும்மாளம் போட்டதோடு பயங்கர ரகளை செய்துள்ளனர். இது திருமணத்திற்கு வந்திருந்த பெண்கள் உள்ளிட்ட மற்றவர்களுக்கு பெருத்த சிரமத்தை ஏற்படுத்தி உள்ளது.

இதுபற்றி தகவலறிந்த காவல் துறையினர், அந்த பண்ணை வீட்டைச் சோதனையிட்டதில், 20 பெட்டிகளில் மதுபாட்டில்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அந்த மதுபாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார், மதுபானம் அருந்திய 250 பேரை கைது செய்தனர்.

குஜராத்தில் கொண்டுவரப்பட்டு உள்ள புதிய மதுபானத் தடைச் சட்டத்தின்படி, மதுபானம் அருந்துபவர்களுக்கு மூன்று வருடம் சிறைத் தண்டனை விதிக்கப்படும் என்பதும், குஜராத்தில் நீண்டகாலமாக மதுவிலக்கு அமலில் இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

Widgets Magazine

இதில் மேலும் படிக்கவும் :