புதன், 6 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: சனி, 28 ஏப்ரல் 2018 (12:54 IST)

கோவை குட்கா தொழிற்சாலையில் போலீஸார் அதிரடி சோதனை

கோவையில் தடைசெய்யப்பட்ட குட்கா, பான்மசாலா உள்ளிட்ட போதை பொருட்களை தயாரித்து வந்த தொழிற்சாலையில் போலீஸார் அதிரடி சோதனை நடத்தினர்.
கோவை சூலூர் அருகே உள்ள கண்ணம்பாளையம் நல்லான் தோட்டம் என்ற பகுதியில் டெல்லியை சேர்ந்த ஜெயின் என்பவருக்கு சொந்தமான 5 ஏக்கர் நிலம் உள்ளது. அதில் சொகுசு பங்களாவும், 20 ஆயிரம் சதுர அடியில் குடோனும் அமைந்துள்ளது.  
 
அந்த குடோனில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட  குட்கா, பான்மசாலா, சாந்தி பாக்கு உள்ளிட்ட போதை பொருட்கள் தயார் செய்யப்படுவதாக கோவை மாவட்ட போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
 
இதனையடுத்து தகவலின் பேரில் 100-க்கும் மேற்பட்ட  தனிப்படை போலீசார் நேற்று இரவு 7 மணியளவில் பங்களா தோட்டத்துக்குள் அதிரடியாக நுழைந்தனர். அங்கு சோதனை நடத்திய போது கோடிக்கணக்கான மதிப்பில் போதை பொருட்கள் தயார் செய்யப்பட்டு விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
போலீஸார் அங்கிருந்த அனைத்தையும் கைப்பற்றி, தலைமறைவாக உள்ள உரிமையாளர் ஜெயினை தேடி வருகின்றனர்.