வியாழன், 28 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Updated : சனி, 2 செப்டம்பர் 2017 (11:06 IST)

மீண்டும் மெரினா போராட்டம்? இரு சக்கர வாகனங்களுக்கு அனுமதி மறுப்பு!!

அரியலூர் மாணவி அனிதா நீட் தேர்வினால் மருத்துவ சீட் கிடைக்காமல் தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் தற்போது தமிழகத்தில் பூதாகாரமாய் வெடித்துள்ளது.


 
 
அனிதாவின் மரணத்திற்கு மத்திய மாநில அரசுகளே காரணம் என்று அரசியல் தலைவர் சிலரும், சினிமா துறை மற்றும் பொது மக்கள் பலரும் குற்றம் சாட்டி வருகின்றனர். மேலும் நீட் தேர்வு ரத்து செய்யப்பட வேண்டும் என போராட்டங்கள் வெடித்துள்ளது.
 
இந்நிலையில், நேற்றும் மதுரையில் அனிதாவின் மரணத்திற்கு நீதி கேட்டு இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். புதுச்சேரியிலும் இளைஞர்கள் தீயை ஏற்றி அவரது மரணத்திற்கான நியாயம் கேட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
 
இதோடு நடிகர் கமல் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்தார். தற்போது, இயக்குநா் கவுதமன் அனிதாவின் வீட்டருகே போராட்டம் நடத்திவருகிறார்.  தற்போது சென்னையிலும் மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர். 
 
இவ்வாறு இருக்கையில் ஜல்லிகட்டு சமயத்தில் அரசை எதிர்த்து நடத்திய போராட்டத்தை போல மீண்டும் அனிதாவிற்காக மெரினா போரட்டம் நடைபெறும் என்று கூறப்படுகிறது. 
 
இதனால் மெரினா கடற்கரையில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மேலும், இரு சக்கர வாகனங்கள் மெரினா பகுதியில் பயணிக்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகிவருகிறது.