ராம்குமார்தான் கொலையாளி என நிரூபிக்க போராடும் காவல்துறை


Dinesh| Last Modified செவ்வாய், 5 ஜூலை 2016 (11:27 IST)
சுவாதியை கொலை செய்ய ராம்குமார் பயன்படுத்திய அரிவாளும், ரத்தம் படிந்திருந்த சட்டையும்தான் காவல்துறைனருக்கு இருக்கும் கடைசி ஆதாரம்,  அதைவைத்து தான் ராம்குமாரை குற்றவாளி என்று கூறி தண்டனை பெற்றுத் தர முடியும்.

 

 
எனவே சட்டையில் படிந்திருந்த ரத்தத்தை மரபணு பரிசோதனை மூலம் கண்டறியே ஐதராபாத்தில் உள்ள சோதனை கூடத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
 
சுவாதி கொலையை நேரில் பார்த்தவர்கள், ராம்குமாரை நேரில் பார்த்தவர்கள் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. ராம்குமார் தங்கியிருந்த மேன்சனில் உள்ள சிலரும் சாட்சிகள் பட்டியலில் சேர்க்கப்பட உள்ளனர்.  ஆதாரங்கள் நிரூபனமானால் தான்  ராம்குமாருக்கு விரைவில் அதிகபட்ச தண்டனை வாங்கிக் கொடுக்க முடியும். 
 
தற்போது சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகச்சை எடுத்து வரும் ராம்குமாரின் உடல்நிலையில் முன்னேற்றம் அடைந்திருக்கிறது.


இதில் மேலும் படிக்கவும் :