திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sivalingam
Last Modified: வியாழன், 24 ஆகஸ்ட் 2017 (22:16 IST)

பெண் போலீசுக்கு முத்தம் கொடுத்த இன்ஸ்பெக்டர். காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்

விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த இன்ஸ்பெக்டர் ஒருவர் தன்னுடன் பணிபுரியும் பெண் போலீசுக்கு முத்தம் கொடுத்ததாக எழுந்த புகாரை அடுத்து அவர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார். 



 
 
விழுப்புரம் மாவட்டம், பிரம்மதேசம் காவல் நிலையத்தில் ஏழுமலை என்பவர் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வரும் நிலையில் அதே காவல் நிலையத்தில் பணிபுரியும் பெண் காவல்துறை அதிகாரி ஒருவரை கட்டிப்பிடித்து, முத்தம் கொடுத்ததாக கூறப்படுகிறது.
 
இதுகுறித்து ஏழுமலை மீது புகார் அந்த பெண் காவல்துறை அதிகாரி, மேலதிகாரியிடம் புகார் கொடுத்ததை அடுத்து முத்தம் கொடுத்த ஏழுமலை காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டார். இந்த சம்பவம் காவல்துறையினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.