ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : ஞாயிறு, 20 ஜூன் 2021 (15:51 IST)

கைதான மணிகண்டனிடம் போலீசார் தீவிர விசாரணை: உதவியாளர்களிடமும் விசாரணை என தகவல்!

நடிகை சாந்தினி அளித்த பாலியல் புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் முன்னாள் அமைச்சர் மணிகண்டனை இன்று காலை பெங்களூரில் கைது செய்தனர். இதனை அடுத்து அவர் சென்னைக்கு சற்றுமுன் அழைத்து வரவழைக்கப்பட்டு அவரிடம் தற்போது தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது 
 
முன்னாள் அமைச்சர் மணிகண்டனை சென்னை அடையாறு அனைத்து மகளீர் காவல் துறையினர் விசாரணை செய்து கொண்டிருப்பதாகவும் அவருடைய உதவியாளர் இருவரிடமும் போலீசார் விசாரணை நடத்தி வருவதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன 
 
விசாரணைக்கு பின்னர் மணிகண்டனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவார்கள் என்றும் அதன் பின் அவர் சிறையில் அடைக்கப்படுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் சார்பில் ஜாமீன் மனு இன்று தாக்கல் செய்யப்படும் என்றும் அந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது