புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : செவ்வாய், 25 மே 2021 (07:40 IST)

மேலும் சில கருப்பு ஆடுகள்: விஸ்வரூபம் எடுக்கும் பத்மா சேஷாத்திரி பள்ளி விவகாரம்

சென்னை பத்மா சேஷாத்திரி பள்ளியில் பணிபுரியும் ராஜகோபாலன் என்ற ஆசிரியர் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கைது செய்யப்பட்டு விசாரணை செய்யப்பட்டு வரும் நிலையில் மேலும் சில ஆசிரியர்களும் இதேபோல் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து உள்ளதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
சென்னை பத்மா சேஷாத்திரி பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர் ராஜகோபாலன் நேற்று போலீசாரிடம் வாக்குமூலம் அளித்த வாக்குமூலத்தில் அவர் வாட்ஸ் அப் மூலம் சேட்டிங் செய்யும்போது மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறி உள்ளார். அதுமட்டுமின்றி தன்னைப் போலவே வேறு சில ஆசிரியர்களும் பாலியல் தொல்லை மாணவிகளுக்கு கொடுத்து வருவதாகவும் அவர் கூறியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. 
 
இதனை அடுத்து இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுக்கும் என்றும் மேலும் சில ஆசிரியர்கள் கைது செய்யப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டு வருவதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் சென்னை காவல்துறை அறிவித்த ஒரு அறிவிப்பில் பத்மா சேஷாத்ரி பள்ளி ஆசிரியரால் பாதிக்கப்பட்ட மாணவிகள் முன் தாமாக முன்வந்து புகார் அளிக்க வேண்டும் என்றும் புகார் அளிப்பவர்கள் விவரங்கள் ரகசியமாக பாதுகாக்கப்படுவதோடு அவர்களுக்கு எந்தவித அச்சுறுத்தலும் ஏற்படாத வகையில் சென்னை காவல்துறை உத்தரவாதம் அளிப்பதாகவும் தெரிவித்துள்ளது.