திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Arun Prasath
Last Modified: வெள்ளி, 13 டிசம்பர் 2019 (10:23 IST)

சிறார்களின் ஆபாச படங்களை பகிர்ந்த 30 பேர்; தனிப்படை விசாரணை

சிறார்களின் ஆபாச படங்களை பகிர்ந்தது தொடர்பாக 30 பேரிடம் தனிப்படை போலீஸார் விசாரணை நடத்துகின்றனர்.

திருச்சியில் சிறார் ஆபாசப் படங்களை ஃபேஸ்புக்கில் பதிவேற்றியதாக ஏசி மெக்கானிக் கிரிஸ்டோபர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவர் பல போலி கணக்குகள் வைத்து ஆபாசப் படங்களை இணையத்தளத்தில் பதிவேற்றியதாக விசாரணையில் தெரியவந்தது.

இந்நிலையில் அவரது செல்ஃபோன் எண்ணை கைப்பற்றிய தனிப்படை காவல்துறையினர், பல தகவல்களை திரட்டி வந்தனர். அதில் பல தகவல்கள் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது. அதில் கிடைத்த ஒரு தகவலின் படி, சிறார்களின் ஆபாச படங்களை பகிர்ந்தது தொடர்பாக 30 பேரிடம் இன்று விசாரணை தனிப்படை விசாரணை நடத்தவுள்ளது.