வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : புதன், 15 ஜூன் 2022 (18:25 IST)

ராஜசேகர் மரணத்திற்கு காவல்துறை காரணமில்லை: கூடுதல் ஆணையர் பேட்டி

rajasekhar lockup
ராஜசேகர் மரணத்திற்கு காவல்துறை காரணமில்லை: கூடுதல் ஆணையர் பேட்டி
சென்னை கொடுங்கையூர் காவல் நிலையத்தில் விசாரணைக்காக அழைத்து செய்யப்பட்ட ராஜசேகர் என்பவர் மர்மமான முறையில் மரணமடைந்த நிலையில் இது குறித்து விசாரணை செய்ய உத்தரவிடப்பட்டது
 
இந்த நிலையில் கொடுங்கையூரில் விசாரணை கைதி ராஜசேகரனின் மரண வழக்கு தொடர்பாக கூடுதல் ஆணையர் அன்பு பேட்டி அளித்துள்ளார். இந்த பேட்டியில் விசாரணை கைதி ராஜசேகரை போலீசார் தாக்கவில்லை என்பதற்கு பிரேத பரிசோதனை அறிக்கையே சாட்சி என்று கூறினார். 
 
மேலும் ராஜசேகர் உடலில் நான்கு காயங்கள் இருப்பதாகவும் இந்த காயங்களால் மரணம் ஏற்படவில்லை என பிரேத பரிசோதனை அறிக்கையில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.
 
இதனை அடுத்து ராஜசேகர் மரணத்திற்கும் காவல்துறைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பது உறுதியாகி உள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.