1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Modified: திங்கள், 30 அக்டோபர் 2017 (15:59 IST)

கமல் மீது வழக்கு பதிவு செய்ய முடியாது - போலீசார் கை விரிப்பு

நடிகர் கமல்ஹாசன் சமீபத்தில் நிலவேம்பு கசாயம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் தனது டுவிட்டரில் கருத்து வெளியிட்டதாக அவர் மீது மதுரை ஐகோர்ட் கிளையில் வழக்கு தொடரப்பட்டது. 


 

 
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், கமல் மீது வழக்கு போட முகாந்திரம் இருந்தால் தாராளமாக வழக்கு போடலாம் என்று அறிவுறுத்தியது. அந்த நிலையில் கருத்து தெரிவித்த அமைச்சர் ஜெயகுமார் கமல் மீது வழக்கு போடுவது குறித்து ஆலோசிக்கப்படும் என்றார். அதன்பின், கமல் மீது வழக்கு போடுவது குறித்து காவல்துறையினர் அவசர ஆலோசனையில் ஈடுபட்டதாகவும் செய்தி வெளியானது.
 
இந்நிலையில், இந்த புகாரில் கமல்ஹாசன் மீது வழக்கு தொடர எந்த முகாந்திரமும் இல்லை என தமிழக காவல்துறை அறிவித்துள்ளது. இது தொடர்பாக மனுதாரருக்கு பதில் அனுப்பப்படும் எனவும் காவல்துறை அறிவித்துள்ளது.