புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 10 மார்ச் 2020 (14:40 IST)

பள்ளிவாசலில் பெட்ரோல் குண்டு வீச்சு: பாஜக, விஷ்வ ஹிந்து அமைப்பினர் கைது!

கோவையில் கடந்த வாரம் பள்ளிவாசல் மீது பெட்ரோல் குண்டு வீசிய நபர்களை போலீஸார் கைது செய்துள்ளனர்.

கோயம்புத்தூரில் வேதாம்பாள் நகர் அருகே இஸ்லாமியர்கள் தொழுகை செய்யும் பள்ளிவாசல் உள்ளது. கடந்த 4ம் தேதி நள்ளிரவி சில அடையாளம் தெரியாத நபர்கள் இந்த பள்ளிவாசல் மீது பெட்ரோல் குண்டுகளை வீசிவிட்டு தப்பி ஓடினர்.

இந்த சம்பவம குறித்து போலீஸார் மேற்கொண்ட விசாரணையில் ஒரு பழிவாங்கும் நடவடிக்கையாக இந்த சம்பவம் மேற்கொள்ளப்பட்டதை கண்டறிந்துள்ளனர். அதை தொடர்ந்து சிசிடிவி காட்சிகளை கொண்டு குற்றவாளிகளை தேடியபோது பாஜக கட்சியை சேர்ந்த பாண்டி என்பவரும், விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பை சேர்ந்த அகில் என்பவரும் பிடிப்பட்டனர்.

விசாரணையில் இந்து முன்னணி பிரமுகர் ஆனந்தன் தாக்கப்பட்ட சம்பவத்திற்கு எதிர்வினையாக பள்ளிவாசல் மீது பெட்ரோல் குண்டு தாக்குதல் நடத்தியது தெரிய வந்துள்ளது.