அமைச்சரை கொரோனாவோடு தொடர்புப்படுத்தி பேசிய நபர்! – கைது செய்த போலீஸார்!
தமிழக அமைச்சர் ஒருவரை கொரோனாவோடு தொடர்புபடுத்தி பேசி வீடியோ வெளியிட்ட நபரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
சென்னையை சேர்ந்த பொறியாளார் சுதர்சன். இவர் சமூக செயலி ஒன்றில் தொடர்ந்து தமிழக முதலமைச்சர் மற்றும் சில அமைச்சர்களை திட்டி பேசி அடிக்கடி பதிவிட்டு வந்துள்ளார். சமீபத்தில் பரவிய கொரோனா வைரஸ் அமைச்சர் ஒருவரின் சாயலில் இருப்பதாக கிண்டல் செய்து இவர் வெளியிட்டுள்ள வீடியோ அதிமுகவினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதை தொடர்ந்து ரியாஸ்கான் என்ற அதிமுக நிர்வாகி ஒருவர் அளித்த புகாரின் பேரில் போலீஸாரால் சுதர்சன் கைது செய்யப்பட்டார். சமூக அமைதிக்கு குந்தகம் விளைவித்தல், கொலை மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளில் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.