1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 5 ஆகஸ்ட் 2022 (10:49 IST)

ஆட்டைய போட்ட இடத்திலேயே விற்க வந்த திருட்டு கும்பல்! – பெரம்பலூரில் விநோத சம்பவம்!

theft
பெரம்பலூரில் பட்டறை ஒன்றில் திருடிய காப்பர் கம்பிகளை அதே கடையில் விற்க திருடர்கள் முயன்ற சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

பெரம்பலூர் பைபாஸ் சாலையில் பொக்லைன் எந்திரங்களை சரிசெய்யும் பட்டறையை நடத்தி வருபவர் பிரதீப். இவர் பட்டறையில் கடந்த சில தினங்கள் முன்னதாக ரூ.8 ஆயிரம் மதிப்பிலான காப்பர் கம்பிகள் காணமல் போயுள்ளன.

இதுகுறித்து பட்டறை அருகாமையில் தனியாகவே பிரதீப் விசாரித்து வந்துள்ளார். இந்நிலையில் சிலர் தங்களிடம் உள்ள காப்பரை விற்பதற்காக பிரதீப்பை அணுகியுள்ளனர். அந்த காப்பர் கம்பிகள் தனது பட்டறையில் காணாமல் போனவை என அறிந்த பிரதீப் அதிர்ச்சி அடைந்துள்ளார். இதுகுறித்து உடனடியாக அவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

கம்பிகளை விற்க வந்த நபர்களை போலீஸார் பிடித்து விசாரித்ததில், மதுபோதையில் பிரதீப் கடையிலிருந்து காப்பர் கம்பிகளை திருடியதும், பின்னர் அதே கடைதான் என தெரியாமல் அவரிடமே விற்க முயன்றதும் தெரிய வந்துள்ளது. மேலும் இந்த கும்பல் காலையில் பழைய துணி சேகரிக்கும் வேலை செய்துவிட்டு இரவில் திருட்டு வேலையில் ஈடுபட்டதாகவும் தெரிய வந்துள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.