திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : செவ்வாய், 7 ஆகஸ்ட் 2018 (15:37 IST)

15 ஆயிரம் போலீஸார் குவிப்பு - பதட்டத்தில் சென்னை

கருணாநிதி உடல்நிலையில் தொடர்ந்து பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக மருத்துவமனை சார்ப்பில் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் ஸ்டாலின் முதல்வரை சந்தித்து பேசியதை தொடர்ந்து சென்னை முழுவதும் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

 
திமுக தலைவர் கருணாநிதி உடல்நலம் பாதிக்கப்பட்டு 10 நாட்களுக்கு மேலாக காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். காவேரி மருத்துவமனை சார்பில் நேற்று கருணாநிதி உடல்நலம் குறித்து வெளியான மருத்துவ அறிக்கையில், அவரது உடல்நிலையில் தொடர்ந்து பின்னடைவு ஏற்பட்டுள்ளது என்று கூறப்பட்டது.
 
அடுத்த 24 மணி நேரம் கழித்துதான் எதுவாக இருந்தாலும் கூறப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சற்றும் சிறிது நேரத்துக்கு முன் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து பேசினார்.
 
இந்நிலையில் தமிழகம் முழுவதும் 1 லட்சம் போலீஸார் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். ராஜரத்தினம் மைதானத்தில் 15000 போலீஸார் முகாமிட்டுள்ளனர். மேலும் மருத்துவமனையில் 300க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பிற்காக குவிக்கப்பட்டுள்ளனர்.