Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

ஜெ.வின் சமையல்காரி சிறையில் சசிகலாவுடன்: இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே!

ஜெ.வின் சமையல்காரி சிறையில் சசிகலாவுடன்: இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே!

Last Modified: செவ்வாய், 18 ஜூலை 2017 (18:10 IST)

Widgets Magazine

பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலா சட்டத்தை எப்படியெல்லாம் மீறலாமோ அப்படியெல்லாம் மீறி வருவதாக தகவல்கள் வருகின்றன. கடந்த சில தினங்களாக சசிகலாவுக்கு சிறையில் விதிகளை மீறி வசதிகள் செய்து கொடுத்திருப்பதாகவும், அதற்காக லஞ்சம் கொடுக்கப்பட்டதாகவும் வரும் தகவல்கள் அதிர்ச்சி தரும் விதமாக உள்ளன.


 
 
சிறையில் சொகுசு வாழ்க்கை, பல்வேறு வசதிகள் என பல தகவல்கள் வந்தன. ஆனால் தற்போது வந்துள்ள ஒரு தகவல் தலையே சுற்றும் அளவுக்கு உள்ளது. சசிகலாவுக்கு ருசியாக சமைத்துக்கொடுக்க போயஸ் கார்டனில் உள்ள ஒரு சமையல்கார பெண் சிறையில் சசிகலாவுடனே தங்கியுள்ளாராம்.
 
இத்தனை பாதுகாப்பு அம்சங்களையும் மீறி எப்படி அந்த பெண் சிறைக்குள் கொண்டுவரப்பட்டார் என்பது மர்மமாகவே உள்ளது. சசிகலாவிடம் இருந்து பணம் வாங்கிக்கொண்டு அதிகாரிகள் சசிகலாவுக்கு 5 அறைகள் ஒதுக்கியுள்ளதாகவும் அதில் ஒரு அறையில் அந்த போயஸ் கார்டன் சமையல்கார பெண் உள்ளதாகவும் கூறப்படுகிறது.

ஜெயலலிதா இருந்த போது போயஸ் கார்டனில் அவருக்கு சமையல் செய்து கொடுக்க மூன்று பெண் சமையல்காரிகள் இருந்தனர். அவர்களில் ஒருவர் தான் தற்போது சசிகலாவுடன் சிறையில் இருப்பதாக கூறப்படுகிறது. அவர்து பெயர் இன்னும் வெளியாகவில்லை.

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் போயஸ் கார்டன் சமையல்காரி ஒருவரை காணவில்லை என கூறப்பட்டது. அதன் பின்னர் அந்த சமையல்கார பெண் பெங்களூரில் வீடு வாடகைக்கு எடுத்து தங்கவைக்கப்பட்டுள்ளதாகவும், அவர் சமைக்கும் உணவு தான் சசிகலாவுக்கு சிறையில் கொண்டு செல்லப்பட்டதாகவும் கூறப்பட்டது. ஆனால் தற்போது சமையல்காரியை சிறையிலேயே தங்க வைத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
 
இந்த சம்பவம் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒருபக்கம் சிறையில் சொகுசு வாழ்க்கையை நடத்த சட்டத்தை அப்படியே காலில் போட்டு மிதித்துள்ள சசிகலாவும், சிறை அதிகாரிகளும். இன்னொரு பக்கம் எந்த குற்றமும் செய்யாத பெண் எப்படி சிறையில் இருக்க முடியும் என இரு மாநில மக்களும் அதிர்ச்சியில் உள்ளனர்.


Widgets Magazine

வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்Widgets Magazine
Widgets Magazine
news

ஜூலியிடம் ஆக்ரோஷமாக கத்தும் வையாபுரி - வீடியோ

பிக்பாஸ் நிகழ்ச்சியில் நாளுக்கு நாள் பரபரப்பான காட்சிகள் அரங்கேறி வருகிறது.

news

பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி எம்பி பதவியை ராஜினாமா செய்தார்!

பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி தனது மாநிலங்களவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார். ...

news

செல்போன் உபயோகிப்பதை கண்டித்த மேஜரை சுட்டுக்கொன்ற ராணுவ வீரர்

ராணுவ வீரர் ஒருவர் செல்போன் பயன்படுத்தக்கூடாது என எச்சரித்த மேஜரை துப்பாக்கியால் சுட்டு ...

news

ஜெயலலிதாவை அப்பல்லோவில் கவனித்த நர்ஸ் தற்கொலை முயற்சி!

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை அப்பல்லோ மருத்துவமனையில் கவனித்து வந்த குளோரியா என்ற ...

Widgets Magazine Widgets Magazine