1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 16 ஜூலை 2023 (12:55 IST)

ஆண்டவனிடம் வரம் கேட்டால் இதைத்தான் கேட்பேன்! – மனம் திறந்த ராமதாஸ்!

ஆண்டவன் தன்னிடம் வரம் கேட்டால் 2 வரங்கள் கேட்பேன் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.



பாட்டாளி மக்கள் கட்சி தொடங்கி 35 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில் 35வது ஆண்டு தொடக்க விழா திண்டிவனத்தில் உள்ள தைலாபுரத்தில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட பாமக நிறுவனர் ராமதாஸ் கோடியேற்றி வைத்து பேசினார்.

பாமக தொண்டர்களிடையே பேசிய அவர் “ஆண்டவன் என் முன் தோறி என்னிடம் என்ன வரம் வேண்டும் எனக் கேட்டால் 2 வரங்கள் கேட்பேன். முதல் வரம் ஒரு சொட்டு மதுக் கூட இல்லாத தமிழ்நாடு வேண்டும் என கேட்பேன். இரண்டாவது வரமாக ஒரு சொட்டு மழை நீர் கூட கடலில் சென்று கலக்கக் கூடாது என்று வரம் கேட்பேன்” எனக் கூறியுள்ளது.

பாமக தனது கட்சியின் முக்கிய கொள்கையாக மது ஒழிப்பைக் கொண்டுள்ளதுடன், தொடர்ந்து மதுக்கடைகளை மூட வலியுறுத்தி போராட்டங்களையும் மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Edit by Prasanth.K