ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : செவ்வாய், 31 மே 2022 (20:29 IST)

தமிழக ஆளுனரை திடீரென சந்தித்த அன்புமணி: என்ன காரணம்?

anbumani rn ravi
தமிழக ஆளுனரை திடீரென சந்தித்த அன்புமணி: என்ன காரணம்?
தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி அவர்களை பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் சந்தித்துள்ளார் 
 
சமீபத்தில் சென்னையில் பாட்டாளி மக்கள் கட்சியின் பொதுக்குழு கூட்டம் கூடியபோது அன்புமணி ராமதாஸ் புதிய தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.
 
 இதனை அடுத்து அவர் அரசியல் பிரபலங்களை சந்தித்து வாழ்த்து பெற்றார். இந்த நிலையில் தமிழக கவர்னர் ஆர்.என். ரவி அவர்களையும் சந்தித்து வாழ்த்து பெற்றார் இதுகுறித்து அன்புமணி தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது
 
பாமகவின் புதிய தலைவராக பொறுப்பேற்றதை அடுத்து இன்று சென்னை கிண்டியில் உள்ள ஆளுனர் மாளிகையில் தமிழக ஆளுனர் திரு. ஆர்.என். ரவி அவர்களை சந்தித்து வாழ்த்துப்பெற்றேன்