திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வெள்ளி, 11 நவம்பர் 2022 (18:46 IST)

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஜிகே மணி.. உடல்நலம் விசாரித்த முதல்வர்!

GK Mani
பாமக முன்னாள் தலைவர் ஜிகே மணி உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் அவரது உடல் நலம் குறித்து தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் விசாரித்ததாக தகவல் வெளியாகியுள்ளன. 
 
தற்போது பாமகவின் தலைவராக அன்புமணி ராமதாஸ் இருந்தாலும் பாமக தோன்றியதிலிருந்து பல ஆண்டுகளாக அக்கட்சியின் தலைவராக இருந்தவர் ஜிகே மணி 
 
இந்த நிலையில் ஜிகே மணி உடல் நலக்குறைவு காரணமாக சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ள நிலையில் ஜிகே மணியின் உடல் நலம் குறித்து பாமக நிறுவனர் ராமதாஸ் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் விசாரித்துள்ளனர். மேலும் மருத்துவரிடம் அவருக்கு உரிய சிகிச்சை வழங்க கேட்டுக் கொண்டுள்ளனர்
 
இந்த நிலையில் ஜிகே மணி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் செய்தி அறிந்த தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவரிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு நலம் விசாரித்ததாகவும் விரைவில் நலம் பெற வாழ்த்துக்களை தெரிவித்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன
 
Edited by Siva