1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Modified: செவ்வாய், 31 ஜனவரி 2017 (14:18 IST)

ஜெயலலிதா நினைவிடத்தில் அமைச்சர்கள் குனிந்து நிற்கும் சிலை அமைக்க வேண்டும்: ராமதாஸ் கிண்டல்!

ஜெயலலிதா நினைவிடத்தில் அமைச்சர்கள் குனிந்து நிற்கும் சிலை அமைக்க வேண்டும்: ராமதாஸ் கிண்டல்!

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடத்தில் அமைச்சர்கள் குனிந்து நிற்கும் சிலை வைக்கலாம் என பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் தனது டுவிட்டர் பக்கத்தில் கிண்டலாக கூறியுள்ளார்.


 
 
தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா கடந்த டிசம்பர் 5-ஆம் தேதி சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் மரணமடைந்தார். அவரது உடல் மெரினா கடற்கரையில் உள்ள எம்ஜிஆர் சமாதி அருகே அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது.

 
இந்நிலையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடம் மீது கிரீடம் அமைக்க வேண்டும் என முதல்வர் பன்னீர்செல்வம் கூறியிருந்தார். இதனை கிண்டலடிக்கும் விதமாக பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
 
அதில், ஜெயலலிதா நினைவிடம் மீது கிரீடம் அமைக்க ஓ.பன்னீர்செல்வம் யோசனை: செய்தி-அதற்கு முன் அமைச்சர்கள் குனிந்து நிற்கும் சிலையும் வைக்கலாம் என கூறியுள்ளார்.