திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: புதன், 20 பிப்ரவரி 2019 (06:51 IST)

20 ஆண்டுகளில் பாமகவின் மாற்றமும் முன்னேற்றமும்

பாட்டாளி மக்கள் கட்சியின் கொள்கையாக கூறப்படுவது 'மாற்றம் முன்னேற்றம்'. திராவிட கட்சிகளுக்கு மாற்று என்று கூறிக்கொண்டாலும் இன்னும் இந்த கட்சியை ஒரு ஜாதிக்கட்சியாகவே மக்கள் பார்க்கின்றனர். வட தமிழகத்தில் குறிப்பிட்ட பிரிவினர்களின் ஆதரவை மட்டுமே பெற்றுள்ள இந்த கட்சி ஒவ்வொரு தேர்தலிலும் அதிமுக, திமுக என இரண்டு கட்சிகளின் முதுகில் மாறி மாறி சவாரி செய்து வருவதே இந்த கட்சியின் மாற்றமும் முன்னேற்றமும் ஆகும்

கடந்த 20 ஆண்டுகளில் பாமகவின் கூட்டணி விபரம் இதுதான்:

1998 பாராளுமன்ற தேர்தல்: அதிமுக கூட்டணி - 5ல் போட்டி 4ல் வெற்றி

1999 பாராளுமன்ற தேர்தல்: திமுக கூட்டணி - 7ல் போட்டி 5ல் வெற்றி

2001 சட்டமன்ற தேர்தல்: அதிமுக கூட்டணி - 27ல் போட்டி 20ல் வெற்றி

2004 பாராளுமன்ற தேர்தல்: திமுக கூட்டணி - 5ல் போட்டி 5ல் வெற்றி

2006 சட்டமன்ற தேர்தல்: திமுக கூட்டணி - 31ல் போட்டி 18ல் வெற்றி

2009 பாராளுமன்ற தேர்தல்: அதிமுக கூட்டணி - 6ல் போட்டி வெற்றி இல்லை

2011 சட்டமன்ற தேர்தல்: திமுக கூட்டணி - 30ல் போட்டி 3ல் வெற்றி

2014 பாராளுமன்ற தேர்தல்: பாஜக கூட்டணி - 8ல் போட்டி 1ல் வெற்றி

2016 சட்டமன்ற தேர்தல்: தனித்து போட்டி - 232 தொகுதிகளில் போட்டி ஒரு தொகுதியில் கூட வெற்றி இல்லை


பாமக இதுவரை ஒரே ஒரு முறை மட்டுமே தனித்து போட்டியிட்டுள்ளது. அந்த தேர்தலிலும் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை. எனவே அதிமுக, திமுக என மாறி மாறி கூட்டணி வைத்து கொண்டு தங்களுக்கு செல்வாக்கு இருக்கும் தொகுதிகளை மட்டும் பெற்றுக்கொண்டு லாபம் அடைந்து வருகிறது பாமக. இரு திராவிட கட்சிகளும் பாமகவை கண்டுகொள்ளாமல் இருந்தால் பாமகவால் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெற முடியாது என்பதே அரசியல் வல்லுனர்களின் கணிப்பாக உள்ளது