ஜெயலலிதாவை சந்திக்க பிரதமர் மோடி சென்னை வருகிறார்: மத்திய அமைச்சர் தகவல்!

ஜெயலலிதாவை சந்திக்க பிரதமர் மோடி சென்னை வருகிறார்: மத்திய அமைச்சர் தகவல்!


Caston| Last Modified வியாழன், 27 அக்டோபர் 2016 (09:02 IST)
தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் ஒரு மாதத்திற்கும் மேலாக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரை பிரதமர் மோடி இன்னமும் வந்து பார்க்கவில்லை என்ற குற்றச்சாட்டு அரசியல் கட்சியினரால் எழுப்பப்படுகிறது.

 
 
இந்நிலையில் பிரதமர் மோடி சென்னை வந்து முதல்வர் ஜெயலலிதாவை விரைவில் சந்திப்பார் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜே.பி.நட்டா கூறியுள்ளார்.
 
இது குறித்து கூறிய அவர், தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் சிகிச்சைக்கு மருத்துவ ரீதியாக அனைத்து உதவிகளையும் மத்திய அரசு செய்து வருகிறது. அவரது உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் காணப்படுவதாக மத்திய அரசுக்கு தெரிவிக்கப்பட்ட தகவலில் கூறப்பட்டுள்ளது.
 
அவருக்கு தொற்று பரவக் கூடாது என்பதற்காக சிகிச்சை அளித்து வரும் மருத்துவர்கள் தவிர வேறு யாரும் அனுமதிக்கப்படுவதில்லை என்பது ஏற்றுக்கொள்ளக் கூடியதுதான். முதல்வரின் உடல்நிலை தேறி அவர் பேச தொடங்கியவுடன் விரைவில் நானும் பிரதமர் மோடியும் சென்னைக்கு வந்து அவரை நேரில் சந்திப்போம் என்றார்.


இதில் மேலும் படிக்கவும் :